1) பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் நரேந்திர மோதி அறிவுறுத்தல்.
2) நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தல்.
3) கஃரீப், ரபி பருவ பயிர்களுக்கு உரிய காலத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
4) சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மியான்மர் வெளியுறவு அமைச்சரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்.
5) மத்திய ஆயுதப்படை காவல் படையில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு – மத்திய தொழில் பாதுகாப்புப்படை தலைமை இயக்குநர் நினா சிங் அறிவிப்பு.
6) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம்.
7) பணியில் உள்ள மருத்துவர்களின் பட்ட மேற்படிப்புக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
8) ப்ராவோ ஓபன் டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி – ஈக்வெடாரின் கோன்ஸாலோ எஸ்கோபர் இணை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்.
==============
source#கல #மண #தமழ #சயதகள #12.07.2024 #DDதமழசயதகள #ddnewstamil